லாரன்ஸ் படத்தில் நடித்த பிறகு என் வாழ்க்கை மோசமா ஆச்சி... திருநங்கை பிரியா கண்ணீர் பேட்டி

Raghava Lawrence Tamil Actors Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 27, 2023 05:43 AM GMT
Report

லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து 2011 -ம் ஆண்டு காஞ்சனா படம் வெளியானது. இப்படத்தில் சரத்குமார், லக்ஷ்மி ராய், கோவை சரோலா, தேவதர்ஷினி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருப்பார். 

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், காஞ்சனா படத்தில் நடித்து மிக பெரிய தவறை நான் செய்து விட்டேன்.

அந்த படத்தில் நடிப்பதற்கு முன்புஎன்னுடைய வாழ்க்கை சாதரணமாக போய்க்கொண்டு இருந்தது. ஆனால் காஞ்சனா படத்தில் பின் பலரும் நான் கோடியில் சம்பாதித்து விட்டேன் என நினைக்கிறார்கள். அந்த படத்திற்கு பின் எனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.