உங்களுக்கு எல்லாம் வாழ்வு தரமாட்டேன் என்று சொன்ன வடிவேலு!! நடிகை ராதிகா பேட்டி

Sarathkumar Raadhika Vadivelu Actors Tamil Actors
By Dhiviyarajan Jan 09, 2024 07:46 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரை வடிவேலு பல வெற்றி கண்ண்டாலும், நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

மேலும் சமீபத்தில் மறைந்த விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத வடிவேலு, கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராதிகா, வடிவேலு குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், " நான் வடிவேலு பற்றி பேச விரும்பவில்லை. ஒரு முறை நாங்கள் விமானத்தில் சென்று கொண்டு இருந்தேன். அப்போது வடிவேலுவை சந்தித்தேன். நாங்கள் என்னுடைய கணவர் பற்றி பேசி கொண்டு இருந்தோம். அந்த சமயத்தில் என் மகன் வடிவேலுவிடம் சென்று, உங்களை ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். என்னுடைய அப்பா உடன் சேர்ந்து நடிக்கிறீர்களா என ஆசையோடு கேட்டான்".

"அதற்கு வடிவேலு சிரித்துக்கொண்டு, அரசியல்வாதிகளுக்கு எல்லாம் நான் வாழ்க்கை கொடுப்பதில்லை என்று சொன்னார். இப்போது நாங்கள் எப்படி இருக்கோம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். இத்தனை வருடமா சினிமாவில் இருக்கும்" என்று ராதிகா கூறியுள்ள்ளார்.