உன் உடம்பு அப்படி இருக்குனு சொல்லி ஆடிஷனில் வைத்து!! கசப்பான அனுபவத்தை சொன்ன ராஷி கண்ணா

Indian Actress Rashi Khanna Tamil Actress Actress
By Dhiviyarajan Mar 02, 2024 09:38 AM GMT
Report

மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா, கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார். தற்போது ராஷி கண்ணா பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.

உன் உடம்பு அப்படி இருக்குனு சொல்லி ஆடிஷனில் வைத்து!! கசப்பான அனுபவத்தை சொன்ன ராஷி கண்ணா | Actress Raashii Khanna Open Talk

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிட ராஷி கண்ணா, தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், நான் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகும் போது உடல் எடையால் நிறைய நிராகரிப்புகளை சந்தித்தேன். சில இயக்குனர்கள் ‘கேஸ் டேங்கர்’ என்று பெயர் வைத்து ஆடிஷன் கூட வைக்காமல் நிராகரித்தனர் என்று ராஷி கண்ணா கூறியுள்ளார்.