மே மாதம் எனக்கு 2ஆம் திருமணமா..வாய்ப்பே இல்லை!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஓபன் டாக்..

Rachitha Mahalakshmi Marriage Tamil Actress
By Edward Mar 04, 2026 08:45 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல் நடிகையாக பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன்பின் தினேஷுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் போலீஸ் நிலையம் வரை சென்று பல பிரச்சனைகளை சந்தித்தார்.

மே மாதம் எனக்கு 2ஆம் திருமணமா..வாய்ப்பே இல்லை!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஓபன் டாக்.. | Actress Rachitha Mahalakshmi Open Her 2Nd Marriage

2ஆம் திருமணமா

சமீபத்தில் ரச்சிதா அளித்த பேட்டியொன்றில், எனக்கு திருமணத்தின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. எப்போதும் மீண்டும் அந்த நம்பிக்கை வராது. கண்டிப்பாக நான் வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்துக்கொள்ளவே மாட்டேன்.

வரும் மே மாதம் எனக்கு திருமணம் என்று யாரோ கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மே மாதம் இப்படித்தான் ஏதாவது சொல்வார்கள், அதில் எதிலும் துளிக்கூட உண்மையில்லை என்று ரச்சிதா தெரிவித்துள்ளார்.