மேலே சட்டைபோடாதபடி மார்ஃபிங் செய்றாங்க!! வேதனையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

Gossip Today Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Edward Mar 04, 2026 06:00 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல் நடிகையாக பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன்பின் தினேஷுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் போலீஸ் நிலையம் வரை சென்று பல பிரச்சனைகளை சந்தித்தார்.

தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் ஃபயர் படத்தில் படுமோசமான படுக்கையறை காட்சியில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார். இதன்பின் சரியான படங்களை தேர்வு செய்து கமிட்டாகி நடித்து வருகிறார்.

 

சமீபத்தில் ரச்சிதா அளித்த பேட்டியொன்றில் AI மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பற்றி பேசி கொந்தளித்துள்ளார்.

AI மற்றும் மார்ஃபிங்

அதில், ஒரு கோயிலில் வெள்ளைநிற புடவையில் சாமி கும்பிட்டபடி நான் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். உடனே சிலர் அதை மார்ஃபிங் செய்து நான் மேலே எதுவுமே போடாதபடி ஷேர் செய்திருந்தார்கள்.

அதை பார்த்துவிட்டு கீழே கமெண்ட்ஸில் சென்று பார்த்தேன். ஒருவர், இது AI-ஆ? உண்மையா? என்று கேட்கிறார், அதற்கு இன்னொருவர், சொல்ல முடியாதுடா உண்மையாகக்கூட இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

மேலே சட்டைபோடாதபடி மார்ஃபிங் செய்றாங்க!! வேதனையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. | Actress Rachitha Mahalakshmi Slams Ai Morphed

அதேபோல் ஒரு சட்டை போட்டபடி போட்டோ போட்டிருந்தேன். அதிலும் இதே வேலையை செய்திருந்தார்கள். எல்லோரும் எனக்கு போன் செய்து இப்படி ஒரு போட்டோ போட்டியா என்று கேட்டார்கள். எனக்கு எப்படி இருக்கும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் ரச்சிதா மகாலாட்சுமி.