இப்போது இவருடன் வாழ்ந்து வருகிறேன்!! விவாகரத்து பற்றி பேசிய ரம்யா கிருஷ்ணன்..

Ramya Krishnan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 24, 2024 04:30 PM GMT
Report

80, 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் நீலாம்பரி, சிவகாமி தேவி போன்ற கதாபாத்திரம் பெரும்பாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இப்போது இவருடன் வாழ்ந்து வருகிறேன்!! விவாகரத்து பற்றி பேசிய ரம்யா கிருஷ்ணன்.. | Actress Ramya Krishnan Divorce

இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ரம்யா கிருஷ்ணன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர், "ஒரு பக்கம் அம்மன், அம்மா, ராஜாமாதா என கெளரவமாக நடித்தாலும், சில படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த வயதிலும் கவர்ச்சியாக நடிக்க ரம்யா கிருஷ்ணனால் மட்டுமே முடியும்".

"ஒரு சமயம் பத்திரிகையாளர் ஒருவர் ரம்யா கிருஷ்ணன் இடம், உங்கள் கணவருடன் விவாகரத்து ஆகிவிட்டதா? இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறீர்களா என்று கேட்டார்".

"இதற்கு கோபம் அடைந்த ரம்யா கிருஷ்ணன், நான் என் கணவருடன் தான் வாழ்ந்து வருகிறேன். என் கணவர் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருக்கிறார். நான் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருக்கிறேன்" என்று பதில் அளித்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.