இந்த நடிகைக்காகத்தான் இவ்வளவு சண்டையா!! நடிகருக்கும் முக்கிய புள்ளிக்குமான போருக்கு காரணம் இதான்..
40 வயது நடிகை
சினிமாவில் ஒரு நடிகை 2 ஆண்டுகள் தாக்குப்பிடிப்பது என்பதே பெரிய விஷயமாக இருக்கும் போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் நடித்து வருகிறார் அந்த 40 வயதை தாண்டிய நடிகை.
அழகும் திறமையையும் சரியாக பயன்படுத்தி லீட் ரோலில் நடித்து வரும் அந்த நடிகை தற்போது டாப் 3 இடத்தில் இருந்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே குறிப்பிட்டு பேசக்கூடிய நடிகர் ஒருவருடன் பல வருடங்களுக்கு முன் இணைத்து பேசப்பட்டார் அந்த நடிகை.
நடிகைக்கு நடிகர் நகை, பணம் என அள்ளி கொடுத்ததாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. பின் இருவரும் பிரிந்துவிட்டதால் இருவரும் சேர்ந்தும் நடிக்கவில்லை.
நடிகர் - அரசியல் புள்ளி
தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க ஆரம்பித்ததில் இருந்து கிசுகிசு பரவ ஆரம்பித்திருக்கிறது. இப்படியொரு சூழல் இருக்க, நடிகை ஒரு முக்கிய புள்ளியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாராம். ஆனால் புள்ளியுடன் இருக்கும் தொடர்பை நடிகருக்கு தெரியாமல் வைத்திருக்கிறாராம்.
நடிகரும் முக்கிய புள்ளியும் இணைந்த ஒரு படத்தில் நடிகைதான் ஹீரோயின். அந்த சமயத்தில்தான் நடிகையுடனான கெமிஸ்ட்ரி முக்கிய புள்ளிக்கு பரவிவிட்டது. இது கோலிவுட்டில் பரவ, நடிகர் இப்போது புது அவதாரம் எடுத்து சிலரை சகட்டு மேனிக்கு விமர்சித்திருக்கிறார்.
அதற்கு முக்கிய காரணமே அந்த நடிகையை முக்கியப்புள்ளி தன்னிடமிருந்து சில நாட்கள் பிரித்து வைத்திருந்தது தானாம். நடிகையோ இரண்டு பேரையும் சமமாக பேலன்ஸ் செய்துதான் ஓட்டிக்கொண்டிருந்தாராம். இப்போது இருவரது சண்டையையும் வீதிக்கு வந்துவிட்டதால் இந்த விஷயத்தில் இருந்து எப்படியாவது நழுவிடவேண்டும் என்று அந்த நடிகை மாஸ்டர் பிளான் போட்டு வருகிறாராம்.