காதல் தோல்வியில் வாடும் விஷால் பட நடிகை.. விரைவில் திருமணமா?
விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் சக்ரா. இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரெஜினா. இவர் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை யாவார்.
இந்நிலையில் நடிகை ரெஜினாவிற்கு விரைவில் திருமணம் என்பது போல் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து நடிகை ரெஜினா தன்னுடைய விளக்கம் அளித்துள்ளார்.
இதில் " 2020ல் எனது காதல் முறிந்துபோனது. அதில் இருந்து மீண்டு வர கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது யாரையும் நான் காதலிக்கவில்லை. திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனோ, இல்லையோ என்பது எனக்கே தெரியவில்லை.
ஏனென்றால் சிறு வயது முதலே தனது காலில் சுயமாக வாழ்வது எப்படி என்பது பற்றி என் அம்மா என்னை பழக்கப்படுத்தி வைத்துள்ளார். எனவே வாழ்க்கையில் யாராவது வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்க மாட்டேன் " என்று நடிகை ரெஜினா கூறியுள்ளார். இவருடைய பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.