அந்த இயக்குனர் படமா.. வந்த வாய்ப்பை ஆணவத்தால் தூக்கி எறிந்த நடிகை அமலா பால்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்க்குனராக இந்தியளவில் பிரபலமானவர் இயக்குனர் மணிரத்னம். 1983ல் பல்லவி அனு பல்லவி என்ற படத்தில் இயக்குனராக ஆரம்பித்து செக்க சிவந்த வானம் படம் வரை பல வெற்றிப்படங்களை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்து வருபவர் மணிரத்னம்.
அப்படி சிவாஜி, கமல் ஹாசன் இயக்க முடியாத கல்கி அவர்களின் காவியமான பொன்னியின் செல்வன் நாவலை இரு பாகங்களோடு படமாக எடுத்துள்ளார். வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதிலும் பல மொழியில் வெளியாகவுள்ளது.
முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகை அமலா பால் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பு பற்றி உண்மையை கூறியுள்ளார்.

மணிரத்னம் அவர்களின் ஒரு படத்தின் ஆடிஷனுக்காக சென்றிருந்தேன். ஆனால் சில காரணங்களால் நான் ஒதுக்கப்பட்டேன். அதன்பின் அதே கதையாக உருவாகிய பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கேட்டார்கள்.
எனக்கு வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் அந்த படத்தை ஏற்க மறுத்துவிட்டேன். அப்போது எனக்கு அந்த மனநிலையில் இல்லாமல் இருந்த காரணமும் ஒன்று தான் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதற்காக நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை என்று ஓப்பனாக கூறியுள்ளார்.