திருமணமாகி 5 வருஷமாச்சு..கர்ப்பம் ஆவீங்களான்னு கேப்பாங்க..காயப்படுத்துவாங்க!! நடிகை ரேஷ்மா..
ரேஷ்மா முரளிதரன்
சின்னத்திரை சீரியலில் பிரபலமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன். கடந்த 2021ல் நடிகர் மதன் பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். தற்போது செல்லமே செல்லமே என்ற சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா, சில விஷயங்களை பேசியுள்ளார்.

அதில் ரேஷ்மா, எனக்கு திருமணமானப்பின் என்னை சீரியலில் கமிட் செய்வதற்கு முன் ப்ரெக்னன்ட் ஆவீங்களா? எதாவது பிளான் இருக்கா? என்று கேட்டுவிட்டுத்தான் கமிட் செய்கிறார்கள்.
ஒருமுறை இல்லை 3, 4 முறை நன்றாக கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்கிறார்கள். இது எனக்கு சங்கடமாக இருந்தாலும், ஒரு பக்கம் பார்க்கும்போது சரிதான் என்று தோன்றியது.

சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும்போது திடீரென கர்ப்பமாகிவிட்டால், அந்த சீரியலில் இருந்து விலகவேண்டி வரும். அது சீரியல் டீமுக்குத்தான் பிரச்சனை என்பதால் இப்படி கேட்கிறார்கள் என்று ரேஷ்மா முரளிதரன் கூறியிருக்கிறார்.