ஒரே ஒரு லிப் லாக் காட்சி.. பட வாய்ப்புகளை இழந்து தவித்த நடிகை ரேவதி!

Kamal Haasan Rekha Revathi
By Dhiviyarajan Jul 01, 2023 06:11 AM GMT
Report

80, 90 களில் இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் ரேவதி. இவர் 1983 -ம் ஆண்டு வெளியான மண் வசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கமல் நடிப்பில் 1986 -ம் ஆண்டு வெளிவந்த புன்னகை மன்னன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரேகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது ரேவதி தானாம். ஆனால் அந்த ரோலில் முத்த காட்சிகள் இருப்பதால் ரேவதி நோ சொல்லவிட்டாராம்.

புன்னகை மன்னன் படம் வெளியான பிறகு ரேகா நடித்திருந்த கதாபாத்திரம் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அப்போது ரேவதி இந்த கதாபாத்திரத்தை இழந்தது நினைத்து மிகவும் வருத்தப்பட்டதாக பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு கூறியுள்ளார்.  

You May Like This Video