கல்யாண வாழ்க்கை இன்னும் ஆரம்பிக்கல!! நடிகை சாக்ஷி அகர்வால் ஓப்பன் டாக்..
சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.
பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
15 ஆண்டுகால காதலருடன் திருமணம் செய்த சாக்ஷி, கணவருடன் பேட்டிகளிலும் கலந்து கொண்டு காதல் பற்றி பகிர்ந்து வருகிறார். தற்போது Fire படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் சாக்ஷி, ஹனிமூன் பற்றி பகிர்ந்துள்ளார்.
கல்யாண வாழ்க்கை
அதில், இன்னும் நாங்கள் கல்யாண வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லை. கல்யாணம் முடிந்த நாட்களுக்கு பின் நான் பிரமோஷனுக்கு அங்க இங்கே என்று சென்று வருகிறேன்.
அவரும் டிராவலிங் சென்றுவிட்டார். காதலர் தினம் வரும் இல்லையா? ஹனிமூனுக்கு தமிழ்நாட்டை சுற்றிவிட்டு பின் யூரோப்பிற்கு செல்ல பிளான் செய்திருக்கிறோம் என்று சாக்ஷி அகர்வால் ஓப்பனாக பேசியுள்ளார்.