14 வருட சினிமா வாழ்க்கை!! மயோசிடிஸ் நோய்க்கு பின் கிளாமரில் உச்சத்தை காட்டிய நடிகை சமந்தா..
தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் சிட்டெடல் படம் வரை நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் நடிகை சமந்தா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார். தீவிர சிகிச்சைக்கு இடையில் கூட படப்பிடிப்பில் கலந்து கொண்ட சமந்தா, இந்தோனேசியாவுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துள்ள சமந்தா படத்தில் அவருடன் நெருக்கமான காட்சியிலும் நடித்துள்ளார். படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக பொது இடத்தில் ரொமான்ஸ் செய்தும் வந்துள்ளார்.
தற்போது குஷி படத்தின் பிரமோஷனுக்காக, சமந்தா சினிமாவில் அறிமுகமாகி 14 வருடத்தை நினைவு கூர்ந்ததை அடுத்து அமெரிக்காவுக்கு சென்று ஒரு ரவுட் வந்து அங்குள்ள மக்களை சந்தித்து வருகிறார்.
மயோசிடிஸ் நோய்க்கு பின் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்ததோடு கவர்ச்சியான வசீகர உடலால் ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார். சேலையில் சிக்ஸ்பேக் காமித்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் சமந்தா.




