8 மாத மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் சவாரி செய்யும் சமந்தா!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய முகம்...
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. அப்படத்திற்கு பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்த சமந்தா சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்துக்கு பின் சுதந்திர பறவையாக நடித்தும் கிளாமர் போட்டோஷூட் எடுத்தும் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருவதாகவும் படுத்த படுக்கையில் எந்திரிக்க முடியாத அளவிற்கு பல வலிகளை அனுபவித்ததாகவும் பேட்டிகளில் கூறியிருந்தார்.
மயோசிடிஸ்-க்காக சிகிச்சை பெற்று வந்த சமந்தா, தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்த ஜிம் ஒர்க்கவுட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை கொஞ்சம் முகம் மாறிவிட்டதை எண்ணி ஆறுதலான கருத்துக்களை கூறி வந்தார்.
தற்போது குதிரையில் சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய பியூட்டியும் பீஸ்ட்டும் என்று ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.