குடிபோதையில் என் அண்ணன்களே அதை பண்ணாங்க!! கொடுமைகளை அனுபவித்த சங்கீதா..
நடிகை சங்கீதா பல தமிழ் படங்களில் நடித்தும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது பிதாமகன் படம் தான். அந்த படத்துக்காக அவருக்கு பிலிம்பேர் விருதும், சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது. தற்போது சங்கீதா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சங்கீதா, சமூதாயத்தில் தான் பிரச்சனை நடக்கும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு என்னுடைய குடும்பத்தினரே பிரச்சனை செய்தார்கள். என்னுடைய அண்ணன்கள் என் பணத்தை நாசம் செய்தார்கள்.
குடிபோதையில் அவர்கள் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் பணத்தை செலவு செய்து வந்தார்கள். என் அம்மா கூட என் பணத்தை என் அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்வார்கள். நான் கிரிஷை திருமணம் செய்தப்பின் தான் எல்லாமே என் வாழ்க்கையில் மாறி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதாக நடிகை சங்கீதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
You May Like This Video