கணவரின் மரணம்..ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டம்!.எதிர்நீச்சல் சீரியல் நடிகை சத்யபிரியாவின் கலங்க வைக்கும் கதை

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 20, 2023 07:06 AM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சத்யபிரியா. இவர் 350 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சத்யபிரியா வாழ்க்கையில் நடந்த பல சோகமான சம்பவங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் சத்யபிரியா தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

இதையடுத்து இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு சத்யபிரியாவின் கணவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சத்யபிரியாவிடம் காசு இல்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டாராம்.

அப்போது தான் இவர் சில தெலுங்கு படங்களுக்கு டப்பிங் கொடுக்க ஆரம்பித்தார். கணவரின் மறைவுக்கு பின் பொருளாதார சூழ்நிலையால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்தார்.

சத்யபிரியா சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய கணவர் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.