நெருக்கமான காட்சியில் நடிக்க வற்புறுத்திய இயக்குநர்!! ஓபனாக பேசிய நடிகை தமன்னா..

Tamannaah Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Jan 20, 2026 02:30 AM GMT
Report

திரைத்துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது பெரும்பாலும் கேள்விக்குறியை தான் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் நடிகைகள் பலரும் தனக்கு நேர்ந்த பல பிரச்சனைகளை ஓபனாக பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை தமன்னா படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தன்னுடைய 20-வது வயதில் அந்த கசப்பான அனுபவம் நடந்ததாக தமன்னா கூறியுள்ளார்.

நெருக்கமான காட்சியில் நடிக்க வற்புறுத்திய இயக்குநர்!! ஓபனாக பேசிய நடிகை தமன்னா.. | Actress Shared Experience Once Faced Age Of 20

நடிகை தமன்னா

அதில், ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வலியுறுத்தினார். அந்தக்காட்சியில் நடிக்க நான் விரும்பவில்லை, மிகவும் அசெளகரியமாக உணர்ந்தேன், அதனால் நடிக்க மாட்டேன் என்று இயக்குநரிடம் கூறினேன்.

அதற்கு உடனே கோபப்பட்ட இயக்குநர், அனைவரின் முன்னிலையிலும், கதாநாயகியை மாற்றுங்கள் என்றார். அந்த காட்சிக்காக இயக்குநர் முகுந்த அழுத்தம் கொடுத்தார்.

நெருக்கமான காட்சியில் நடிக்க வற்புறுத்திய இயக்குநர்!! ஓபனாக பேசிய நடிகை தமன்னா.. | Actress Shared Experience Once Faced Age Of 20

ஆனால் அப்போது நான், என்ன நடந்தாலும் அதை சந்திப்போம், ஆனால் விருப்பமில்லாத விஷயத்தை செய்யக்கூடாது என்று உறுதியாக இருந்தேன் என்று என்னிடம் சொல்லிக்கொண்டேன். இறுதியில் இயக்குநர் மன்னிப்பு கேட்டார் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

அந்த இயக்குநர் யார்? எந்த படம் என்று தமன்னா தெரிவிக்கவில்லை. சமீபகாலமாக தமன்னா ஆடிய பாடல்கள் தான் இந்தியா முழுவதும் டிரெண்டாகி வருகிறது.