மேடையில் முத்தமிட்ட நடிகர்.. பொது நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடந்த சோகம்

Richard Bollywood Hollywood Shilpa Shetty
By Bhavya Oct 06, 2024 11:30 AM GMT
Bhavya

Bhavya

Report

நடிகை ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக ஒருகாலத்தில் இருந்தவர்.

இவர் தமிழில் விஜய்யுடன் 'குஷி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். மேலும், மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவாவுக்கு இவர் ஜோடியாக நடித்திருந்தார்.

மேடையில் முத்தமிட்ட நடிகர்.. பொது நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடந்த சோகம் | Actress Shilpa Struggled In Stage

தமிழ், இந்தி, கன்னடம், குஜராத்தி, தெலுங்கு ஆகிய 9 மொழிகளை தெரிந்த இவர் சினிமாவில் 30 - ஆண்டுகளாக தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.

49 - வயதை எட்டியும் இன்றும் பல இளம் நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் அழகையும், உடல் அமைப்பையும் பராமரித்து வருகிறார்.

அவ்வப்போது, ஷில்பா ஷெட்டியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

முத்தமிட்ட நடிகர்

இந்நிலையில், ஒரு பிரபல நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி தர்ம சங்கடமான சூழலுக்கு ஆளானார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹாலிவுட் முன்னணி நடிகரான ரிச்சர்ட் கேரே கலந்து கொண்டுள்ளார்.

ஷில்பா ஷெட்டி அவரை அறிமுகம் செய்து மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது, கைகளில் முத்தமிட்ட ரிச்சர்ட் தொடர்ந்து ஷில்பா ஷெட்டியின் கன்னத்தில் அடுத்தடுத்து முத்தங்களை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேடையில் முத்தமிட்ட நடிகர்.. பொது நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடந்த சோகம் | Actress Shilpa Struggled In Stage

மேடையில் முத்தமிட்ட நடிகர்.. பொது நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடந்த சோகம் | Actress Shilpa Struggled In Stage

இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஷில்பா அந்த சூழலை சாதுரியமாக சமாளித்து நிகழ்ச்சியை ஒருவழியாக நடத்தி முடித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.