சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவா இது!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்
சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிகளாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் இருக்கிறார்கள்.
அப்படி தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸு-வாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா சர்மா, காயகுடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அப்படம் சரியான வரவேற்பை பெறாமல் இருந்ததால் சினிமாவில் இருந்து விலகி பட்டப்படிப்பில் கவனம் செலுத்தினார்.
சட்டப்படிப்பை படுத்து முடித்து தற்போது வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா சர்மா.
இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் ஐபிஎல் போட்டியை பார்க்க கிரிக்கெட் ஸ்ரேடியம் சென்று எடுத்த புகைப்படத்தை பல நாட்கள் கழித்து பகிர்ந்துள்ளார்.
