44 வயதாகும் நடிகை சினேகா ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்.. அவரே கூறியுள்ளார் பாருங்க

Sneha Actress
By Kathick Jan 02, 2026 02:30 AM GMT
Report

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் சினேகா. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

44 வயதாகும் நடிகை சினேகா ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்.. அவரே கூறியுள்ளார் பாருங்க | Actress Sneha Fitness Secret

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 2 குழந்தைகளை பெற்று 44 வயதிலும் மிகவும் ஃபிட்டாக இருக்கும் நடிகை சினேகாவை பார்த்தாலே பலருக்கும் ஆச்சரியம்தான். இந்த நிலையில், தனது ஃபிட்னஸ் குறித்து பேட்டி ஒன்றில் நடிகை சினேகா பேசியுள்ளார்.

44 வயதாகும் நடிகை சினேகா ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்.. அவரே கூறியுள்ளார் பாருங்க | Actress Sneha Fitness Secret

இதில், "எல்லா வகையான பயிற்சிகளையும் நான் செய்துள்ளேன். ஒவ்வொரு பயிற்சியுமே, குறிப்பிட்ட காலத்திற்கு பின் எனக்கு பயன் தராது. அப்படி பயன் தரவில்லை என்றால், உடனே வேறு பயிற்சிக்கு மாறிவிடுவேன். அப்படி இப்போது இடைப்பயிற்சி எனக்கு பயனளிக்கிறது. தினமும் மிகக்குறைவான கலோரியே நான் எடுத்துக்கொள்வேன். அதில் மிகவும் கவனமாக இருப்பேன்.

44 வயதாகும் நடிகை சினேகா ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்.. அவரே கூறியுள்ளார் பாருங்க | Actress Sneha Fitness Secret

சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து விடுவேன். மாதம் ஒரு முறை, தோன்றினால் சர்க்கரை எடுத்துக்கொள்வேன். முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுவதே எனக்கு பிடித்த ஒன்று. துரித உணவுகளுக்கு ஸ்ட்ரிக்டாக நோ. மாதம் ஒருமுறை வெளியில் சாப்பிடுவோம்" என கூறியுள்ளார்.