பண்ணை வீட்டில் 15 நாட்கள்!! முன்னணி நடிகருடன்.. சௌந்தர்யா குறித்து பிரபலம் ஓபன்
சௌந்தர்யா
90ஸ் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா.
கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னுமணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெறும் 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.
இதன்பின் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். திரையுலகின் உச்சத்தில் இருந்த நடிகை சௌந்தர்யா, 2004ஆம் ஆண்டு விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காலமானார். இவர் மரணமடையும் போது 7 மாதம் கர்ப்பமாக இருந்தார் என சொல்லப்பட்டது.
பிரபலம் ஓபன்
இந்நிலையில், சௌந்தர்யா குறித்து பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "சில்க்குடன் நடிக்க வேண்டும் என்று நடிகர்கள் எப்படி ஆசைப்பட்டார்களோ அது போன்று தான் சௌந்தர்யாவுடனும் நடிக்க ஆசைப்பட்டார்கள்.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகர் ஒருவர் சௌந்தர்யாவுடன் ஷூட்டிங்கிற்காக அவருடைய நண்பனின் பண்ணை வீட்டில் இரண்டு பேரும் 15 நாட்கள் தங்கியிருந்தார்கள்.
அந்த நேரத்தில் கிலோ கணக்கில் சௌந்தர்யாவுக்கு அந்த நடிகர் தங்க நகைகளை கொட்டிக்கொடுத்தார் என்ற பேச்சுக்கள் இடம் பெற்றது" என்று கூறியுள்ளார்.