அஜித்தின் மகளாக நடிக்கிறாரா நடிகை ஸ்ரீலீலா.. வெளிவந்த உண்மை தகவல்
Ajith Kumar
Sreeleela
By Karthick Raja
அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் Dare Devil திரைப்படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. ஷாலினி அஜித் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த படப்பிடிப்பில் நடிகை ஸ்ரீலீலா, அனிருத், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். நீண்ட நாட்களாக அஜித்தின் மகளாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்கிற தகவல் இணையத்தில் உலா வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீலீலா அஜித்தின் மகளாக நடிக்கவில்லை என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் அஜித்தின் ஜோடியாக அவர் நடிக்கிறாரா என்பதை தற்போது சொல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீலீலா ஒன்றரை வருடம் காத்திருந்தார் என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.
