நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கையா இது!! உணவகத்தில் பாசத்தை பொழியும் அக்கா
தெலுங்கு மொழியில் 2000 ஆம் ஆண்டு வெளியான ஹனுமான் ஜங்ஸன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் ஸ்ரீதிவ்யா.
அதன்பின் மனசாரா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய ஸ்ரீதிவ்யா, தமிழில் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
ஊத கலர் ரிப்பன் நடிகை என்ற பெயரெடுத்த ஸ்ரீதிவ்யா, ஜீவா, வெள்ளைக்கார துறை, காக்கி சட்டை, ஈட்டி, பென்சில், மருது, காஸ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொர போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையில் பிரபலம் கொடுத்த பார்ட்டி ஒன்றில் தலைக்கேரிய போதையில் ஆட்டம் போட்டு தன் பெயரை கெடுத்துக்கொண்டதாக சினிமா விமர்சகர்கள் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி வந்தனர்.
இதனால் தான் கடந்த 5 ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். தற்போது அவரது சொந்த கிராமத்தில் செட்டிலாகிய ஸ்ரீதிவ்யா தனது தங்கை ஸ்ரீரம்யாவுடன் உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார். அங்கு அக்காவும் தங்கையும் பாசத்தை பொழியும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ரீதிவ்யா.




