43 வயது சத்யராஜ் பட நடிகையா இது!! வாய்ப்பில்லாமல் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சுனிதா வர்மா..
தமிழ் சினிமாவில் பிற மொழி பேசும் நடிகைகள் அறிமுகமாகி பாப்புலர் ஆனாலும் சிலருக்கு ஏமாற்றத்தை தந்துவிடும். அப்படி ஒருசில தமிழ் படங்களில் நடித்து காணாமல் போன நடிகைகள் வரிசையில் இருக்கிறார் நடிகை சுனிதா வர்மா. 2001ல் தெலுங்கு சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார் சுனிதா வர்மா.
அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து வந்த சுனிதா, தமிழில் ஒருமுறை சொல்லிவிடு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன் பின் நடிகர் சத்யராஜ் கதாநாயகனாக நடித்த 6'2 படத்தில் ஐஸ்வர்யா என்ற ரோலில் நடித்தார். பின் இருவர் மட்டும், பிறகு போன்ற படங்களில் நடித்தார்.
கடைசியாக 2011ல் கருங்காலி படத்தில் நடித்த சுனிதா வர்மா, வாய்ப்பில்லாமல் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக காணாமல் போய்விட்டார். ஒருசில மலையாள மொழிகளில் நடித்த சுனிதா 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். தற்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


