என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்.. ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என சொல்வார்கள்! நடிகை சுவாசிகா கூறிய அதிர்ச்சியூட்டும் விஷயம்
லப்பர் பந்து, மாமன், கருப்பு, நூறு சாமி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சுவாசிகா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, "அங்கே போகலாம், இங்கே போகலாம் என பல மேனேஜர்கள் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சில இயக்குநர்களின் பெயர் மட்டும்தான் கிடைக்கும்.

ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என சொல்வார்கள். அம்மா உடனே அனைத்து நகைகளையும் கழற்றி தந்துவிடுவார். பலமுறை அப்படி நடந்துள்ளது. அவர்கள் அழைத்து செல்லும் இடங்களை பார்த்தால் அவ்வளவு பயமாக இருக்கும். அப்போதுதான் அம்மா என்னிடம் சொன்னார், இனிமேல் சினிமா வேண்டாம் என்று.
பிறகு மலையாளத்துக்கே சென்று முயற்சி செய்தேன். எப்போதும் என் மீது நம்பிக்கை இருந்தது. மிளகாய் ஸ்பிரே இல்லாமல் நான் எங்கும் போனதில்லை. ஒருநாள்கூட சினிமாவிலிருந்து பின்வாங்க நினைத்ததே இல்லை" என கூறியுள்ளார்.
