பல் வலிக்காக ஊசி போட்ட நடிகை? வெளியில் முகம் காட்ட முடியாமல் தவிக்கும் நிலை

Indian Actress
By Edward Jun 18, 2022 04:30 PM GMT
Report

நடிகைகள் சிலர் தங்கள் உடலையும் அழகையும் மெருகூட்ட பல சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஒருசிலருக்கு அந்த சிகிச்சை செட்டாகும். ஒரு சிலருக்கு அதுவே ஆபதாகிவிடும். அப்படி பல் வலிக்காகாக சிகிச்சைக்கு சென்ற ஒரு நடிகை அடையாளமே தெரியாமல் முகம் மாறிய சம்பவம் அறங்கேறியுள்ளது.

பெங்களூர் ஜேபி நகரில் வசித்து வருபவர் நடிகை சுவாதி. கன்னடத்தில் ஒருசில படங்களில் நடித்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு பல வலிக்க ஆரம்பிக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள மருத்துவர் ஒரு ஊசியை போட்டுக்கொள்ள சொல்லி ஊசியை கொடுத்துள்ளர். ஊசியை போட்டுக்கொண்ட சுவாதி இதனால் முகமே மாறிய முக வீக்கத்துடன் காணப்பட்டார்.

இதனால் வீட்டிற்குள்ளே அடங்கி வெளியில் தலைக்காட்டாமல் இருந்து தவித்து வருகிறார். இதனை தற்போது புகைப்படம் மூலம் நடிகை சுவாதி வெளியிட்டது தற்போது இணையத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.