3 காதல் தோல்வியை சந்தித்த சிம்ரன்!! ரஜினிகாந்த்-ஐ தூக்கி எறிய இது தான் காரணமா..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகர்களான அப்பாஸ், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்த சிம்ரன் பல நடிகர்களுடன் காதல் கிசுகிசிக்களில் சிக்கினார்.
ஆரம்பத்தில் அப்பாஸ் உடன் காதல் கிசுகிசிக்களில் சிக்கினார். சுதாரித்துக்கொண்ட அப்பாஸ் அதிலிருந்து மீண்டு வேறொரு பக்கம் திரும்பினார். அதன்பின் டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரத்துடன் நெருக்கமாக இருந்து குடும்பம் நடத்தும் நிலை வரை சென்றார் சிம்ரன். அதன்பின் குடும்பத்தினர் வேண்டாம் என்று கூறியதால் சிம்ரனை கழட்டிவிட்டார் ராஜு சுந்தரம்.

அதன்பின் பல படங்களில் நடித்த கமல் ஹாசனுடன் ஜோடியாக நடித்து காதலில் விழுந்தார் என்றும் இருவரும் ரகசிய உறவில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின் கமல் ஹாசன் பத்திரிக்கையாளர்களை, என்னுடைய பெரூமில் ஏன் எட்டிப்பார்க்கிறீர்கள் என்று கேட்டதும் சிம்ரன் அவரிடம் இருந்து விலகிவிட்டார்.
அப்படி இருந்த காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் ஜோதிகா ரோலில் பிரபுவுக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் சிம்ரன் அப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.
அதற்கு காரணம் திருமணமாகிய புதிது என்றும் அப்போது கர்ப்பமாக இருந்ததாலும் என்னால் நடனமாட முடியாது என்ற காரணத்தினாலும் அப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் சிம்ரன்.
மேலும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பேனே தவிர பிரபுவுக்கு மனைவியாக என்னால் நடிக்க முடியாது என்றும் கூறியதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து தான் பல ஆண்டுகள் கழித்து பேட்ட படத்தில் அவருக்க் ஜோடியாக நடித்தார் சிம்ரன்.