68 வயது நடிகருடன் ரொமான்ஸ்!! நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படத்தை கிண்டல் செய்யும் ரசிகர்கள்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை திரிஷா சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார். சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அப்படி சென்சேஷனலாக இருக்கிறார். அதற்கு காரணம் அவர் மீது எழும் விமர்சனம். நடிகர் மன்சூர் அலி கான் திரிஷாவை அவதூறாக பேசிய விஷயம் சமூக வலைத்தளங்களில் பெருசாக வெடிக்க.. எப்படியோ அந்த பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால், அரசியல்வாதி ஒருவர், திரிஷாவை மோசமாக பேசி இருந்தார்.
[IUVA7Y
இதனை தொடர்ந்து அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தங்க் லைஃப் போன்ற படங்களில் நடித்து வரும் திரிஷா பல ஆண்டுகள் கழித்து மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
68 வயது நடிகருடன் ரொமான்ஸ் -ஆ என்று சில விமர்சித்தும் வந்தனர் தற்போது சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் அணிந்துள்ள புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
கேரளா ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்காக அருகில் இருந்த வேன் மீது ஏறி கையசைத்து பேசியிருந்தார். அவர் அணிந்த நீலநிற சட்டையை போல் திரிஷா போட்டிருப்பது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேலை அப்படி இருக்குமோ என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.




