த்ரிஷாவை விட வயது குறைவு ஆனால் அம்மா ரோலில் நடிக்கும் கொடுமை.. அந்த நடிகை?

Abhirami Trisha Actress
By Bhavya May 20, 2025 03:45 PM GMT
Report

த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் விஜய், அஜித், சூர்யா, மகேஷ் பாபு, கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

42 வயதை எட்டிய த்ரிஷா, இன்றும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் இவரும் ஒருவர்.

அடுத்து த்ரிஷா நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

த்ரிஷாவை விட வயது குறைவு ஆனால் அம்மா ரோலில் நடிக்கும் கொடுமை.. அந்த நடிகை? | Actress Trisha Is Older Than This Actress

யார் தெரியுமா?

இந்நிலையில், தற்போது பலருக்கும் தெரியாத ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, த்ரிஷாவை விட அபிராமி வயது குறைவானவர்.

ஆனால், த்ரிஷா இன்றும் நாயகியாக நடிக்கிறார். அபிராமி அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா கடந்த 1983-ம் ஆண்டு மே மாதம் பிறந்தவர். அபிராமியை பொறுத்தவரை அவர் 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர். இதனால், மாதக் கணக்கில் அபிராமியை விட த்ரிஷா பெரியவர் என்பது தெரிய வந்துள்ளது.   

த்ரிஷாவை விட வயது குறைவு ஆனால் அம்மா ரோலில் நடிக்கும் கொடுமை.. அந்த நடிகை? | Actress Trisha Is Older Than This Actress