Thug Life : கமலுக்கு ஜோடி.. விமர்சிப்பாங்கன்னு எனக்கு தெரியும்..ஆனா!! நடிகை திரிஷா ஓபன் டாக்..
தக் லைஃப்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ளது தக் லைஃப் படம்.
இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தக் லைஃப் படத்தின் சுகர் பேபி என்ற இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது.
திரிஷாவின் கிளாமர் லுக் ஆட்டத்தில் இப்பாடல் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. படத்தின் பிரமோஷனுக்காக மும்பை சென்றிருக்கும் தக் லைஃப் படக்குழுவினர், பாலிவுட் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
விமர்சிப்பாங்கன்னு
அப்போது பேசிய திரிஷா, இப்படத்தில் நானும் இருக்கிறேன் என்று கூறப்பட்டபோது நான் இதில் ஒப்பந்தமாகவில்லை. ஆனால் அப்போதே எங்களின் ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும் என்றும் அதேசமயம் இதை விமர்சிப்பவர்களும் இருப்பார்கள் என்றும் எனக்கு தெரியும்.
அதன்பின் தான் நான் இந்த படத்தில் நடிக்க கையெழுத்திட்டேன். கமல் ஹாசன், மணிரத்னம் இருவரும் எவ்வளவு புரிதலுடன் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை திரைக்குப்பின் பார்ப்பது பெரிய அனுபவம்.
நடிகர்களாகிய நாம் அனைவரும் அவர்கள் இருவரும் வேலை செய்வதை பார்க்க வேண்டும், அது ஒரு மாயாஜாலம் போல் இருந்தது என்று திரிஷா பகிர்ந்துள்ளார்.