40 வயதாகியும் நோ மேரேஜ்!! லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக கடும் கோபத்திலும் அடக்கி ஆளும் குந்தவை திரிஷா..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா ஆரம்பத்தில் பல சறுக்கல்களை சந்தித்து டாப் இடத்தினை பிடித்தார். மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தினை பிடித்தார். இடையில் லீக்ஸ் வீடியோ, காதல் தோல்வி, நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணம் என பல பிரச்சனைகளை சந்தித்து மார்க்கெட்டை இழந்தார்.
தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்த திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை இரு மடங்காக உயர்த்தினார். இதனை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி, உலக நாயகன் கமல் ஹாசனின் Thug Life, சல்மான் கானின் பாலிவுட் படம், மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது வரை லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா பாலிவுட் சென்றும் தன் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் இருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக சோலோ நடிகையாக நடித்த அவரின் படமும் முக்கிய ரோலில் நடிக்கும் படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை பெற்று வருகிறது.
ஆரம்பத்தில் இருந்து நயன் தாராவிற்கு போட்டியாக திரிஷாவும் இருந்து வந்தார். தற்போது பல ஆண்டுகள் திரிஷாவின் அஜித், கமல், சல்மான் கான், சிரஞ்சீவி, மலையாள படங்கள் நயன்தாராவின் கரியருக்கு ஸ்பீட் பிரேக்காக அமைந்துள்ளது.
நயன்தாரா ஒவ்வொரு படியாக இறங்க இறங்க திரிஷா இரு படியாக மேலே ஏறிக்கொண்டே இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக திருமணம் செய்யாமல் பதுங்கி தன் வழியில் நடைபோட்டு வரும் திரிஷாவை பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.