இரண்டு முறை கர்ப்பத்தை கலைக்க டார்ச்சர் செஞ்சாங்க!! சீரியல் நடிகை விலாசினியின் மறுப்பக்கம்..

Serials Abortion Divorce Tamil Actress Actress
By Edward Jan 20, 2024 07:30 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் நடிகை விலாசினி. சின்னத்திரை நடிகையாகவும், பாடகியாவும், தொகுப்பாளினியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்-ஆகவும் பணியாற்றி வரும் விலாசினி, திருமணமாகி கணவரின் நடவடிக்கை சரியில்லை என்று அவரைவிட்டு பிரிந்துவிட்டார்.

இரண்டு முறை கர்ப்பத்தை கலைக்க டார்ச்சர் செஞ்சாங்க!! சீரியல் நடிகை விலாசினியின் மறுப்பக்கம்.. | Actress Vilasini Divorce Abortion Husband Torture

தற்போது விவாகரத்தாகி சீரியலில் நடித்து வரும் விலாசினி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார். கர்ப்பம் கலைந்ததை எப்படி சமாளித்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விலாசினி, அந்த வலி இருக்கத்தான் செய்கிறது. அந்த வலியை நான் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டேன். என் குழந்தை கடவுளிடம் இருப்பதாக நான் நம்புகிறேன் அந்த விசயத்தில் நான் லக்கி தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக உணர்கிறேன்.

குழந்தை பெத்துகிட்டு தவறான ஒரு பெயரோட இங்கையும் இருக்கமுடியாம, அங்கையும் இருக்க முடியாம ஒரு பாடுபடுகிற வாழ்க்கை உனக்கு வேண்டாம் என்று நினைத்து தான் கடவுள் நினைத்தாரோ என்னமோ என்று தெரிவித்துள்ளார். ரொம்ப கஷ்டமான வலி, ரொம்பவே வலிக்கும். தெரிந்தே அந்த விசயத்தை நான் செய்தேன். கணவர் குடும்பத்தில் தான் அதை செய்ய சொன்னார்கள்.

இரண்டு முறை கர்ப்பத்தை கலைக்க டார்ச்சர் செஞ்சாங்க!! சீரியல் நடிகை விலாசினியின் மறுப்பக்கம்.. | Actress Vilasini Divorce Abortion Husband Torture

கர்ப்பமானப்பின், அதற்கு ஒத்துக்கொள்ள வைக்க பல காரியங்களை செய்தார்கள். உன்னிடம் இருந்து ஒரு வாரிசு வரணும் என்கிற அவசியம் இல்லை அதை செய்யாதே என்று சொன்னார்கள். எப்படியும் குழந்தை வந்தப் பின்பும் சாகடிக்க தான் முயற்சிப்பார்கள். அதையெல்லாம் நினைத்து பார்க்கும் போது வலிக்கும், இப்படி டார்ச்சர் செய்கிறார்களே என்று நினைத்து தான் அதற்கு ஒத்துக்கொண்டேன்.

அவர் குழந்தை என்று அவர் நினைக்கவில்லை. இரண்டு முரை கருக்கலைப்பு செய்திருக்கிறேன். முதல் முறை சாதாரணமாகவும் அடுத்த முறை அதிகமாக டார்ச்சர் செய்தார்கள். மனசாட்சி இல்லாதவர்களிடம் அப்படி இருக்கிறதைவிட அதை செய்துவிடலாம்.

கமலுக்கு வயசென்ன, மாயாவுக்கு வயசென்ன!! பிக்பாஸ்-ல நடக்குறது இதுதான்.. பிரபலம் கூறிய தகவல்...

கமலுக்கு வயசென்ன, மாயாவுக்கு வயசென்ன!! பிக்பாஸ்-ல நடக்குறது இதுதான்.. பிரபலம் கூறிய தகவல்...

அவர் எனக்கு மட்டும் அதை செய்யவில்லை, அதைதான் பலருக்கும் செய்திருக்கிறார். அப்படி இருக்கிறவன் தான் கூச்சமில்லாமல் வாழ்ந்துட்டு இருக்கான். நல்ல வேலை அதிலிருந்து கடவுள் காப்பாற்றிவிட்டார் என்று விலாசினி எமோஷ்னலாக கூறியிருக்கிறார். 

Gallery