மதுவுக்கு அடிமையாகி நாசமாய் போனேன் : போதையில் வாழ்க்கையை இழந்த நடிகை மனிஷா கொய்ராலா
பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் சிலர் தமிழில் அறிமுகமாகி சூப்பர் ஹிட் படத்தில் நடித்து அந்த பக்கம் சென்றவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி பிரியங்கா சோப்ராவும் தமிழில் அறிமுகமாகி அங்கு சென்று வாய்ப்பினை தக்கவைத்தவர் தான்.
அந்தவரிசையில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை மனிஷா கொய்ராலா. பாம்பே, உயிரே படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று அடுத்தடுத்து தமிழ், இந்தி என நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

2010ல் திருமணம் செய்து கொண்ட மனிஷா கொய்ராலா புற்றுநோய் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்த ஒருசில படங்களில் குணச்சித்திர ரோலில் நடிக்கவும் செய்தார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், கேமராவுக்கு முன் தைரியமாக இருக்க மது குடித்து நடிக்க ஆரபித்தேன். ஆனால் அது இல்லாமல் தூக்கம் வராது என்றளவிற்கு மதுவுக்கு அடிமையாகியதாக கூறியுள்ளார்.
மதுகுடித்து வாழ்க்கையை சீரழித்து கொண்டதாகவும் புற்றுநோய் பாதிப்பால் வாழ்க்கையின் பாடத்தை கற்றுக்கொண்டதாகவும் மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்.