அந்த காரணம் காட்டி விஜயகாந்தை ஒதுக்கிய நடிகைகள்!! அடம்பிடித்த நதியா..
மதுரை பக்கம் இருந்து சினிமாத்துறைக்கு வந்தவர்களில் ஒருவர் விஜயகாந்த். வாய்ப்பு தேடி வந்த விஜயகாந்த் தன் திறமையை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றி டாப் நடிகராக திகழ்ந்தார். நடிகராக மட்டும் இல்லாமல் சிறந்த மனிதராகவும் பலருக்கு உதவும் குணத்தையும் பெற்றிருந்தார்.
தற்போது உடல்நிலை மோசமானதால் நடிப்பையும் அரசியலையும் விட்டு விலகி உடலை பார்த்து வருகிறார். அவருடன் நடிக்க வேண்டும் என்று பல பிரபலங்கள் நினைப்பதுண்டு.
ஆனால் அவர் கருப்பாக இருப்பதை காரணம் காட்டி சில நடிகைகள் ஆரம்பத்தில் நடிக்க மறுத்துள்ளனர். அப்படி அவரை திருமணம் செய்யபோகும் அளவிற்கு போன நடிகை ராதிகா கூட கருப்பாக இருப்பதை காரணமாக சொல்லி நடிக்க மறுத்துள்ளார்.
அதேபோல் நடிகை நதியா, அம்பிகா, ராதா போன்ற நடிகைகளும் விஜயகாந்தை ஒதுக்கி வைத்தனர். அதன்பின் அந்த நடிகைகள் அவருடன் ஜோடியாக நடித்து வந்தார்கள். இதில் நடிகை நதியா மட்டும் அவருடன் நடிக்க முடியாது என்று கூறினார். ஆனால் விஜயகாந்த் அவரை ஒருவழிக்கு வரவழைத்திருக்கிறார்.