16 வயதில் 30 வயது நடிகருடன் திருமணம்!! விவாகரத்து செய்யாமல் காதலியுடன் வாழ்க்கை!! யார் இவர்?
1973ல் வெளியான பாபி என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை டிம்பிள் கபாடியா. முதல் படத்திலேயே நடிகை ரிஷி கபூருக்கு ஜோடியாக நடித்தவர் டாப் நடிகையாக மாறினார்.

ராஜேஷ் கன்னா - டிம்பிள் கபாடியா
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் மிகப்பெரிய ரசிகையாக இருந்த டிம்பிள், விமான பயணத்தில் அவரை சந்திக்கு வாய்ப்பை பெற்றுள்ளார். அப்போது டிம்பிள் கன்னாவுக்கு 16 வயது, ராஜேஷ் கன்னாவுக்கு 30 வயது.

இருவரும் முதல் சந்திப்பிலேயே பழக்கம் நெருக்கமாகி காதலும் ஏற்பட்டுள்ளது. தன்னைவிட 15 வயது மூத்தவரான ராஜேஷ் கன்னாவை மணமுடித்தார் டிம்பிள் கன்னா. திருமணத்திற்கு பின் டிம்பிள் கன்னாவை சினிமாவில் இருந்து விலகி இருக்க வலியுறுத்த, அவரும் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
தோல்வி
தம்பதிக்கு டிவிங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என இரு மகள்கள் உள்ளனர். ராஜேஷ் கன்னாவின் திரை வாழ்க்கை சரியத்தொடங்க, தோல்விப் படங்களை சந்தித்து வந்தவர் ஒருக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டார். தொடர் தோல்விக்குப்பின் மதுவுக்கு அடிமையாக பல பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளார்.

ராஜேஷ் கன்னா பற்றி நடிகை டிம்பிள் கூறுகையில், நான் ராஜேஷ் கன்னாவை திருமணம் செய்துகொண்ட நாளிலேயே எங்கள் வீட்டில் மகிழ்ச்சி முடிவுக்கு வந்தது என்று கூறியிருந்தார்.
காதலி அனிதா
தினமும் சண்டைகளால் சோர்வடைந்து, வீட்டைவிட்டு வெளியேறினார். கணவரிடம் இருந்து பிரிந்தபின் தன் குழந்தை தனியாக வளர்த்தார். பின் ராஜேஷ் கன்னா தன்னுடைய காதலி அனிதா அத்வானியுடன் வாழத் தொடங்கியிருக்கிறார்.

இருவரும் இறுதிவரை நன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் டிம்பிள் கபாடியா, ராஜேஷ் கன்னாவை விவாகரத்து செய்யவில்லை. இதுகுறித்து ராஜேஷ் கன்னா, டிம்பிள் கன்னா, என்னை விவாகரத்து செய்யவிரும்பவில்லை, அதற்கு காரணம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்றும் கூறியிருந்தார்.
