53 வயதாகியும் திருமணம் செய்யாத விஜயகாந்த், ரஜினி பட நடிகை!! காரணமே அவர் தான்..
சினிமாவை பொறுத்தவரை திருமணம் வயதை எட்டுவதற்குள் எப்படியாவது சம்பாதித்து தன் மார்க்கெட்டை இழக்காமல் பார்த்துவிடும் எண்ணத்தை வைத்துக்கொள்வார்கள் நடிகைகள். அதனால் தான் நடிகைகள் பெரும்பாலும் 35 வயதை எட்டியும் கல்யாணம் செய்யாமல் தள்ளிப்போட்டு வருவார்கள்.
அப்படி வயதாகிய போதும் அதை ஒதுக்கி வரும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் 40 வயதை தாண்டியும் அதை செய்யாமல் இருக்கிறார்கள் சிலர்.
அப்படி 90களில் ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை ஷோபனாவும் இன்றுவரை திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருந்து வருகிறார்.
நடன கலைஞராக இருந்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்ண்டம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார் ஷோபனா. அவர் திருமணம் செய்யாததற்கு காதல் தான் என்று பயல்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆண் நண்பருடன் சுற்றித்திருந்த ஷோபனா அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். அதனால் தான் இன்று வரை அவர் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் என்று கூறியுள்ளார் பயில்வான். தற்போது அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.