நடிக்காம பராக் பார்த்த ஹீரோயின்!! நடிகையை அந்த கெட்ட வார்த்தையால் திட்டித்தீர்த்த சிவக்குமார்.
தமிழ் சினிமாவில் 70, 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் சிவக்குமார். பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த சிவக்குமார் தனக்கு பின் தன் இரு மகன்களாக சூர்யா, கார்த்தி-க்கை சினிமாவில் அறிமுகம் செய்து மிகப்பெரியளவில் வளர்த்துள்ளார்.
சிவக்குமார் சினிமாவில் நடித்து வந்த காலக்கட்டத்தில் யாரிடமும் கிசுகிசுக்களிலும் பிரச்சனையிலும் சிக்காமல் பார்த்து நடந்து கொண்டார். இந்நிலையில் சிவக்குமார் தன்னுடன் நடித்த போது கெட்ட வார்த்தையில் திட்டியதாக பிரபல நடிகை சுலோக்ஷனா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
பல படங்களில் சிவக்குமாருடன் நடித்திருக்கிறேன். அம்மா இருக்கா என்ற படத்தில் சிவக்குமாருடன் நடித்த போது, ஒரு சம்பவம் நடந்தது. சிவக்குமார் டயல்லாக்குகள் பேசிக்கொண்டிருந்த போது நான் பராக் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இதனால் கோபத்தில் என்னை பன்னாடை என்று சிவக்குமார் திட்டியதாகும் தன்னை செல்லம்மா என்று தான் கூப்பிடுவார் என்றும் சுலோக்ஷனா கூறியுள்ளார். அதை அவர் காமெடி கலந்து வார்த்தையில் தான் பேட்டியில் தெரிவித்துள்ளார்.