ஏன் இப்படி பண்றீங்க..அதான் எனக்கும் சந்தோஷம்..ரசிகர் செயலால் யாஷிகா ஆனந்த் வேதனை!!
யாஷிகா ஆனந்த்
சினிமாவில்13 வயதிலேயே நடிக்கும் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். 2016ம் ஆண்டு யாஷிகா நடிப்பில் கவலை வேண்டாம் என்ற முதல் திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
நெஞ்சில் பச்சை குத்திய ரசிகர்
இந்நிலையில் ரசிகர் ஒருவர் யாஷிகா அனந்தின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். இதை பார்த்த யாஷிகா ஆனந்த், எனது புகைப்படத்தை ரசிகர் ஒருவர் நெஞ்சில் பச்சை குத்தியதை பார்த்தேன்.
இப்படி பச்சை குத்தும்போது எவ்வளவு வலிச்சிருக்கும்? ஏன் இப்படி பண்றீங்க? உங்க அம்மாவ சந்தோஷப்படுத்துங்க, அதான் எனக்கும் சந்தோஷம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் யாஷிகா ஆன்ந்த்.