ஈகோ இல்லாமல் அஜித், சூர்யாவை மாஸ்டரில் கொண்டு வந்த தளபதி! இதுதான்யா நட்பு..
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்ததாக பெரிம் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு படத்தினை திருவிழா போல் கொண்டாடும் நடிகர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவரும் கடந்த பல வருங்களுக்கு மேல் சந்தித்து பேசியது கிடையாது. அப்படி இருக்கையில் இருவரும் தற்போது வரை நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.
ஆனால் ரசிகர்களுக்குள் நடக்கும் சண்டையால் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் கெட்ட பெயர்தான். அந்தவகையில் அவர்களின் பெயரை கூட ஈகோ இல்லாமல் படங்களில் பயன்படுத்திக்கொள்வார்கள். அதில் நடிகர் விஜய் எப்போதுமே ஈகோ இல்லாத மனிதர் என்பதை அடிக்கடி காட்டிக் கொண்டே இருக்கிறார்.
அந்தவகையில் மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே புதுமையாகவும் மிகவும் இளமையாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் விஜய்யிடம் ஏன் குடிக்கிறீர்கள் என்று காரணம் கேட்டால் பழைய சினிமா பட காதல் கதைகளை கூறி அனைவரையும் வெறுப்படைய வைப்பார். இந்த காட்சிகள் ரசிகர்களிடையே செம வரவேற்பு பெற்றுள்ளது.
அதில் ஒரு முறை தல அஜித் நடிப்பில் வெளியான காதல்கோட்டை பட கதையையும் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் காதல் கதையும் கூறி அனைவரையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.
விஜய்யின் 28 வருட சினிமா வாழ்க்கையில் முற்றிலும் வித்தியாசமான படமாக உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வசூலில் சாதனைகளை பெற்று வருவதை கொண்டாடி வருகிறார்கள்.