2.2 லட்சம் கோடிக்கு நாமம்!! லஞ்சம் கொடுத்து மாட்டிய கெளதம் அதானியின் நிலைமை?
கெளதம் அதானி
உலக பணக்காரர்களில் ஒருவரான அதானி குடும்பத்தின் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்காவில் ஊழல் மற்றும் மோசடி செய்ததாக கூறி மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க குற்றவியல் துறை, கெளதம் அதானி மற்றும் அவரது 2 உறவினர்கள் உட்பட 7 பேர், அமெரிக்காவில் இந்திய அதிகாரிகளுக்கு 26.5 கோடி டாலர் (2100 கோடி ரூபாய்) லஞ்சமாக கொடுத்து 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கு அதிகமான லாபம் கிடைக்கும் ஒப்பந்தங்களை பெற்றதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இந்த விஷயம் இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. அதன் எதிரொலியாக இன்று காலை முதல் அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்து பெரியளவில் வீழ்ச்சியை சந்தித்ததால் அதன் முதலீட்டாளர்கள் பெருமளவிலான தொகையை இழந்துள்ளனர்.
2.2 லட்சம் கோடி
சில பங்குகள் 20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை 16 சதவீதம் வீழ்ச்சியடைந்து 1185.90 ரூபாயாக குறைந்தது. அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கின் விலை 10 சதவீதம் வீழ்ச்சி கண்டு 2538.20 ரூபாயாக குறைந்தது.
இதனால் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ள நிலையில் காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் ரூ 2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழுமம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் தகவலின் படி தற்போது அதானியின் சொத்து மதிப்பு 11.4 பில்லியன் டாலர் குறைந்து 58.4 பில்லியன் டாலராக மாறியிருக்கிறது.