தளபதி விஜய்யின் அந்த படம் பார்த்து தூங்கிட்டோம்.. அதிதி பாலனை திட்டும் விஜய் ரசிகர்கள்...
Vijay
Beast
Aditi Balan
By Jai
அருவி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன், சமந்தாவின் சாகுந்தலம், நானியின் சரிபோதா சனிவாரம், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் முக்கிய ரோலிலும் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில், நான் விஜய் ரசிகை என்றும் விண்டேஜ் விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் என்றும் கூறியுள்ளார். காதலுக்கு மரியாதை, ஷாஜகான் போன்ற படங்கள் ரசித்து பார்த்ததாகவும், கில்லி என்னுடைய ஃபேவரைட் படம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாண்டிச்சேரியில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தை கேங்காக பார்த்தேன். அப்போது முதல் 15 நிமிடம் ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடினோம். மற்றவர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள்.
ஆனால் அதன்பின் கதை போகிற போக்கில் அப்படியே தூங்கிவிட்டோம். இப்படி அதிதி பாலன் சொல்லியிருப்பது விஜய் ரசிகர்களை கடுப்பாகி அவரை திட்டி வருகிறார்கள்.