நடிகையின் பெயரில் வாட்சப்பில் மோசடி.. எச்சரித்த அதிதி ராவ்! என்ன?
அதிதி ராவ்
பிரஜாபதி என்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ராவ். இதன்பின் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்திய அதிதி, 2017ஆம் ஆண்டு மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கினார்.
மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

என்ன?
இந்நிலையில் அதிதி ராவ் தனது பெயரை பயன்படுத்தி வாட்சப்பில் ஒரு நபர் போட்டோகிராபர்களை தொடர்பு கொண்டு, போட்டோஷூட் பற்றி பேசுவதாக தனக்கு தெரியவந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
தன் டீம் மூலமாக தான் அனைத்தையும் செய்வதாகும், பர்சனல் நம்பரை இதற்காக பயன்படுத்துவது இல்லை எனவும் அதிதி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அது நான் இல்லை, அந்த நம்பரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என அதிதி இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ளார்.
