அதிதியை 2-ஆம் திருமணம் செய்யப்போகும் சித்தார்த்தின் முதல் மனைவி இவரா!! வைரலாகும் புகைப்படம்..
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2003ல் வெளியான பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகராக அறிமுகமாகினார் நடிகர் சித்தார். இதனை தொடர்ந்து ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் எச்4, காவியதலைவன், ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார்.
பாடகராகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருக்கும் சித்தார்த், கடந்த 2003ல் மேக்னா நாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சித்தார்த். 2007ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அதன்பின் சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். இதனையடுத்து நடிகை அதிதி ராவ் ஹைதேரியை ரகசியமாக காதலித்து வந்தார். சமீபத்தில் தான் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து, தங்கள் காதலை வெளியில் வெளிப்படையாக தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் திருமணம் செய்து விவாகரத்து செய்த முதல் மனைவியின் புகைப்படம் 20 ஆண்டுகள் கழித்து இணையத்தில் கசிந்துள்ளது. இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
