21 வயதில் திருமணம்! வாய்ப்புக்காக கணவரை பிரிந்து வாழும் நடிகை அதிதி ராவ்..
தமிழ் சினிமாவில் ஸ்ரீங்கராம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. மலையாள நடிகையாக சினிமாவில் அறிமுகமாகியதோடு இந்தி படங்களில் முழு நேர நடிகையாக கொடிக்கட்டி பறந்து வந்தார். ஆரம்பத்தில் ஆள் அடையாமே இல்லாமல் இருந்த அதிதி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகான தோற்றத்தோடு மாறினார்.
தமிழில், காற்றுவெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற மணிரத்னம் படத்திலும் சைக்கோ படத்திலும் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் அதிதி ராவுக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் இணையத்தில் கசிந்துள்ளது.
அவரது 17 வயது இருக்கும் போது சத்யதீப் மிஸ்ரா என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அதன்பின் 21 வயதான போது 2009ல் அவரை திருமணம் செய்துகொண்டார்.
அப்போது அதிதி இந்தி சினிமா படங்களில் நடித்திருந்ததால் மார்க்கெட் இழக்க நேரும் என்ற காரணத்தால் திருமணமாகியதை மறைத்து வந்தார். பின் ஒரு கட்டத்தில் 2012-13 ஆண்டுகளுக்கிடையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ முடிவெடுத்தனர்.
இதற்கு காரணம் அதிதி ராவுக்கு அடுத்தடுத்த படங்களின் வாய்ப்பு திருமண வாழ்க்கையால் கெடாமல் இருக்க வேண்டும் என்று இந்த முடிவை எடுத்ததாக சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் நடிகை அதிதி ராவ்.
தற்போது பிளாஸ்டி சர்ஜரிக்கு முன் பின் என்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.