அதிதி ஷங்கர் காதலிக்கிறாரா.. அய்யய்யோ என்ன சொல்லறீங்க
Shankar Shanmugam
Aditi Shankar
By Karthick Raja
அதிதி ஷங்கர்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் அண்மையில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

காதலிக்கிறாரா
அவ்வப்போது போட்டோஷூட் வெளியிட்டும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தொகுப்பாளினி அஞ்சனா காதல் குறித்து சுற்றி வளைத்து கேள்வி கேட்டார்.

அதற்கு அதிதி ஷங்கர் நான் காதலிக்கவில்லை. நான் ஷங்கர் மகள் என்று தெரிந்தால் எந்த ஒரு பையனும் என்கிட்ட வந்த பேச மாட்டார்கள். அப்பா நான் உன்னோட பொண்ணு பா என்று அழகாக பதில் கூறியுள்ளார்.