அப்பாவால எனக்கு வாய்ப்புலாம் வேண்டாம் திறமைக்கு கிடைச்சா போதும்! சங்கர் மகள் அதிதி எடுத்த முடிவு..
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகளாக விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் அதிதி சங்கர். இயக்குனர் முத்தய்யா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் படத்தின் ஆடியோ லான்ச் நேற்று மதுரையில் நடைபெற்றது.
மருத்துவ துறையில் இருந்து நடிப்பின் ஆர்வம் கொண்டதால் தந்தை சங்கரின் அனுமதியோடு நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அதிதி சங்கர். நேற்று பத்திரிக்கையாளர்களளை சந்தித்து சில விசயங்களை பேசியிருக்கிறார் அதிதி சங்கர். இப்படியொரு வாய்ப்பு கொடுத்த சூர்யா, ஜோதிகாவுக்கு நன்றி என்று கூறியதோடு, அப்பா இயக்கத்தில் நடிக்கவும் முடியும்.
என் திறமையை பார்த்து என் அப்பா வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் ஒருசில படங்களில் நடிக்க கையெழுத்திட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் அப்பாவிடம் நடிப்பு செட்டாகவில்லை என்றால் பிஜி படிக்கிறேன் என்று கூறினேன்.
இப்போது சினிமா செட்டாகிவிட்டது. அப்பா படத்தில் எதிலிலும் தலையிடவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கூட வரவில்லை. என் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்று கூறியுள்ளார் அதிதி சங்கர்.
