ஐஸ்வர்யா அதை பண்ணும் போது எரிச்சலாகும்!! புலம்பித்தள்ளும் சங்கர் மகள் நடிகை அதிதி
இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வந்த அதிதி, விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சமீபத்தில் அதிதி ஒரு விசயத்திற்காக புலம்பி இருக்கும் செய்தி இணையத்தில் கசிந்துள்ளது.
அதாவது அக்கா ஐஸ்வர்யா மற்றும் தம்பியுடன் ஹோட்டலுக்கு சென்றால் என் நாப் ஆர்டர் செய்யட்டுமா என்று கேட்பேன். ஆனால் என் அக்கா அப்படி எதுவும் வேண்டாம் என்று கூறிவிடுவதால் எனக்கு பிடித்ததை ஆர்டர் செய்துவிடுவேன். பின் சாப்பாடு வந்து சாப்பிடும் போது நான் அர்டர் செய்த சாப்பட்டை என் அக்கா சாப்பிடுவாள்.
என் அக்கா ஒரு பக்கம் இப்படி என்றால் என் தம்பியும் நான் ஆர்டர் செய்ததை அப்படியே சாப்பிடுவான். இதை பார்த்தால் எனக்கு ஒரே எரிச்சலாக இருக்கும் நான் என்ன பண்ணுவது என்று புலம்பி இருக்கிறார். இந்த சம்பவம் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு முன் அதிதி ஒரு பேட்டியொன்றில் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.