அய்யனார் துணை சீரியல்: நிலா எடுத்து அதிரடி முடிவு.. அனைவரும் ஷாக்.. புரோமோ வீடியோ..

Serials Tamil TV Serials Ayyanar Thunai
By Karthick Raja May 31, 2026 10:46 AM GMT
Report

ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. இந்த சீரியல்தான் விஜய் தொலைக்காட்சியின் TRP-யில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.  

விவாகரத்துக்கு பின் சோழனிடம் இருந்து நிலாவை அவருடைய அம்மா, அப்பா அழைத்து சென்றுவிட்டனர். இந்த நிலையில், நிலாவை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து செல்ல திட்டம்போடுகிறார்கள். இதனை தெரிந்துகொண்டு, அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார் நிலா. அதுவும் சோழனின் உதவியுடன் அங்கிருந்து வெளியேறி மீண்டும் அய்யனார் துணை குடும்பத்திடம் சேர்ந்துவிடுகிறார்.

அய்யனார் துணை சீரியல்: நிலா எடுத்து அதிரடி முடிவு.. அனைவரும் ஷாக்.. புரோமோ வீடியோ.. | Afte Rdivorce Nila Decides To Get Married

இதன்பின், நிலாவை தேடி அவருடைய அம்மாவும் அப்பாவும் அங்கு வருகிறார்கள். நிலாவை கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்து செல்ல முயற்சி செய்கிறார்கள். 'சோழனுடன் வாழ பிடிக்காமல் தான் நீ விவாகரத்து வாங்கினாய், அதன்பின் எப்படி இந்த வீட்டில் இருக்க முடியும்' என நிலாவின் தந்தை கூறுகிறார்.

இந்நிலையில், தனது தந்தையின் கையை தட்டிவிட்டு, 'எனக்கு இங்கு இருக்கத்தான் பிடித்துள்ளது, சோழனை விவாகரத்து செய்துவிட்டு இங்கு இருப்பதுதானே உங்களுடைய பிரச்சனை, எனக்கு சோழனை மீண்டும் திருமணம் செய்து வைத்துவிடுங்கள்' என கூறுகிறார் நிலா.

அய்யனார் துணை சீரியல்: நிலா எடுத்து அதிரடி முடிவு.. அனைவரும் ஷாக்.. புரோமோ வீடியோ.. | Afte Rdivorce Nila Decides To Get Married

இரண்டாவது முறையாக சோழனை திருமணம் செய்துகொள்ள நிலா எடுத்துள்ள இந்த முடிவை கேட்டு அய்யனார் துணை குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.