10 வருடங்களாக ஒதுக்கி வைத்திருந்த இயக்குநர்! சூர்யாவால் வழிக்கு வரும் யுவன் சங்கராஜா..
தமிழ் சினிமாவில் உடலை வறுத்திக்கொண்டு கலைஞர்களை நடிக்கவைக்கும் இயக்குநராகவும் விருது படத்திற்கு ஏற்ற இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் பாலா. சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை உள்ளிட்ட் வெற்றி படங்களை கொண்டு மிரட்டியவர். இதையடுத்து குறித்த படங்கள் சில காரணங்களால் தள்ளி போனது.
இந்நிலையில் சூர்யா தயாரிப்பில் தொடர்ந்து 4 படங்கள் உருவாகி வரும் நிலையில் அடுத்த படத்தில் இயக்குநர் பாலாவை இயக்கவுள்ளாராம். இப்படத்தில் இரண்டாம் முறையாக அதர்வா நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளாராம்.
இப்படத்திற்கு இசை யார் என்று கேள்வி வந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்க ராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நந்தா படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து இயக்குநர் பாலா படத்தில் இசையமைக்க இருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது.