இரண்டாம் முறை கர்ப்பம்!! ஆண் குழந்தை பெற்றெடுத்த நடிகை பிரணிதா..
நடிகை பிரணிதா சுபாஷ், கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான உதயன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து, 2012 -ம் ஆண்டு வெளிவந்த கார்த்தியின் சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
அதன் பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுவும் பிளாஷ்பேக்கில் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் முறை கர்ப்பம்
பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்.
மகள் பெற்றப்பின்பும் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த பிரணிதா, சமீபத்தில் இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.
தற்போது பிரணிதாவிற்கு மகன் பிறந்திருக்கிறார். கணவருடன் எடுத்த குழந்தை புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார் நடிகை பிரணிதா.